பொது ஊரடங்கு உத்தரவு, தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு – முதலமைச்சர் பழனிசாமி
பொது ஊரடங்கு உத்தரவு, தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளுடன் 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது
கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வரும் 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு இளநிலை வகுப்புகள் தொடங்கும்
மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை வகுப்புகள் 7ஆம் தேதி முதல் தொடங்கும்
மருத்துவப் படிப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்
விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி
14.12.2020 முதல் மெரீனா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்
பொருட்காட்சி அரங்கங்களில் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி