வணிகம்

(01-12-2020) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் (01-12-2020) இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.13 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4532 -க்கு விற்பனையாகிறது.

கடந்த அக்டோபர் மாதம் முதலே இறங்கத்தொடங்கிய தங்கத்தின் விலை, நவம்பர் மாத இறுதிவரை குறைந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் மாதத்தின் முதல் நாளான இன்று சற்று உயர ஆரம்பித்துள்ளது‌. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4519 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.13 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4532 க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி உயர்ந்துக்கொண்டுதான் வருகிறது. இன்றும் வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் ரூ.1.30 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.64.60 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.64600 க்கு விற்பனையாகிறது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து 36256 ரூபாய்க்கு விற்பனையாகிறது.