இந்தியா

விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அகில இந்திய டாக்சி சங்கம் தகவல்

விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாவிட்டால், 3-ந்தேதி முதல் நாடு முழுவதும் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய டாக்சி சங்கம் அறிவித்து உள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு பிரதமர், உள்துறை, வேளாண் அமைச்சர்களுக்கு இந்த சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்த சங்கத்தின் தலைவர் பல்வந்த் சிங், இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நாடு முழுதும் நடத்தப்படும் என்றார்.