தமிழ்நாடு

வங்க கடலில் உருவாகி வரும் புயலை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் உதயகுமார்

வங்க கடலில் உருவாகி வரும் புயலை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிவாரண முகாம்கள் மற்றும் தொலை தொடர்பு கருவிகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை அப்புறப்படுத்த தொடர்புடைய பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், மின் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

பொது மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்ற அவர், புயலை எதிர்கொள்வதற்கான கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். தென் மாவட்டங்களில் உள்ள் 7605 ஏரிகளில் 979 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.