இந்தியா

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடி உயர்வு!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது

எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. இந்த விலை மாற்றமானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொருத்து அமையும். மார்ச் மாதம் கொரோனாவால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது.

இதனால் ஏப்ரல், மே மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தது. பின்னர் ஜூன், ஜூலை மாதங்களில் விலை ஏறியது. பின்னர் விலை மாற்றம் இல்லை.

இந்நிலையில் தற்போது டிசம்பர் மாதத்துக்கான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. (மானியம் இல்லாதது). இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ரூ.610க்கு விற்பனையாகும் சிலிண்டர் இனி, ரூ.660ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, 19கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.56.50 உயர்ந்துள்ளது. விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 1410.10க்கு விற்பனையாகிறது.