ஜனவரியில் கட்சி துவங்க உள்ளதாக ரஜினி அறிவிப்பு
ஜனவரியில் கட்சித் துவங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு வெளியாகுமென நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ஜனவரியில் கட்சித் துவக்கம்,டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல.
வரப்போகின்ற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதசார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்…அதிசயம்…நிகழும்!!! என பதிவிட்டுள்ளார்.