அரசியல்தமிழ்நாடு

தமிழக மக்களின் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை – ரஜினிகாந்த்

தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி என்று ரஜினிகாந்த் தனது தேர்தல் பங்களிப்பை உறுதிசெய்து தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனவரியில் கட்சித் துவங்கவுள்ளதாகவும், டிசம்பர் 31-இல் தேதி அறிவிப்பு வெளியாகுமென நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ஜனவரியில் கட்சித் துவக்கம்,டிசம்பர் 31-இல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல எனத் தெரிவித்துள்ளார்

வரப்போகின்ற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதசார்பற்ற, ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்…அதிசயம்…நிகழும்!!! என பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்திருக்கும் அவர், தான் வென்றால் அது மக்களின் வெற்றியென்றும், தான் தோற்றால் அது மக்களின் தோல்வியென்றும் தெரிவித்துள்ளார்.