விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி: 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

கான்பராவில் இன்று நடைபெறும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஷிகர் தவான் 1 ரன்னிலும், விராட் கோலி 9 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

பின்னர் வந்த சஞ்சு சாம்சன் 23 ரன்னிலும், மணிஷ் பாண்டே 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுமுனையில் கே.எல் ராகுல் நங்கூரம் போல நின்று அரைசதம் கடந்தார்.

சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரவிந்திர ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை இந்தியா எடுத்தது