மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வேன் – ஜோ பைடன்
கொரோனா தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருப்பதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் கூறியுள்ளார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதன்முறையாக ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் சிஎன்என் தொலைக்காட்சிக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது தான் அதிபராக பொறுப்பேற்ற நாள் முதல் 100 நாட்களுக்கு முக கவசம் அணியும்படி பொதுமக்களை கேட்டுக்கொள்ள இருப்பதாக பைடன் தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை மக்களுக்கு உணர்த்த பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருப்பதாக பைடன் கூறினார்.
முன்னாள் அதிபர்களான ஒபாமா, புஷ் மற்றும் கிளின்டன் ஆகியோர் மக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாகக் கூறி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இருக்கின்றனர் என்றும் பைடன் தெரிவித்தார்.