இந்தியாஉலகம்

டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தனது கருத்தைத் திரும்பப் பெற கனடா பிரதமர் மறுப்பு

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய கருத்து இருநாடுகளின் நல்லுறவை பாதிக்கும் என்று இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போதும், தனது கருத்தைத் திரும்பப் பெற ட்ரூடோ மறுத்து விட்டார்.

மனித உரிமைகளுக்காக அமைதியான முறையில் எங்கு போராட்டம் நடந்தாலும் அதை கனடா ஆதரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படுவதை வரவேற்பதாகவும் ட்ரூடோ தெரிவித்தார்.

முன்னதாக விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. கனடா பிரதமரின் கருத்தைக் கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை சார்பில், கனடா நாட்டுத் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.