தமிழ்நாடு

சர்க்கரை ரேசன் அட்டையை அரிசி அட்டையாக மாற்றி கொள்ளலாம் – தமிழக அரசு

சர்க்கரை ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரிசி அட்டைக்கு மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்க்கரை குடும்ப அட்டையை தகுதி அடிப்படையில், அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட அதிகாரியிடமும் விண்ணப்பித்தினை வழங்கலாம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டுள்ளார்.விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு அரிசி குடும்ப அட்டையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 20-ஆம் தேதி வரை குடும்ப அட்டையின் நகலினை இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.