தடுப்பூசி வந்தாலும் கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியாது – உலக சுகாதார நிறுவனம்
தடுப்பூசி வந்தாலும் கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்று தடுப்பூசி ஆய்வில் முன்னேற்றம் கண்டுள்ளன. இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சீனாவும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பதாக கூறி இருக்கிறது. இந்தியா இன்னும் சில வாரங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளது. இந்த நிலையில் காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குநர் மைக்கேல் ரியான், தடுப்பூசி தொட்டு விடும் தூரத்தில் வந்து விட்டது என்றும், பிரச்னை தீர்ந்து விட்டது என்றும் மனநினைவு கொள்ளக் கூடாது என்று கூறி உள்ளார்.
தடுப்பூசியானது முற்றிலும் தொற்றே இல்லாத சூழலை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கூட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ள மைக்கேல் ரியான், இப்போதும் பல நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என்று உலகசுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.