Covid19உலகம்

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணி தொடக்கம்!

ரஷ்யாவில் ஸ்பூட்னிக் வி எனும் கொரோனா தடுப்பூசி மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான ஸ்பூட்னிக் வி எனும் கொரோனா தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு கட்ட சோதனைகளில் இது நோய் எதிர்ப்பு திறன் கொண்டது என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்காக மருத்துவமனைகளில் உபயோகிக்க அந்த நாடு உத்தரவிட்டது.

இதனையடுத்து தலைநகர் மாஸ்கோவில் உள்ள 70 கிளினிக்களுக்கு ஸ்பூட்னிக் வி தடுப்பூசி விநியோக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக மருத்துவர்கள், இதர மருத்துவப் பணியாளர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் என்றும் மாஸ்கோ நகர அதிகாரிகள் கூறினர். மேலும், பல்வேறு நோய்களுக்கு ஆளானவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு இப்போதைக்கு தடுப்பூசி போடப்படமாட்டாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.