அரசியல்தமிழ்நாடு

சென்னையிலுள்ள குடிசைவாசிகளுக்கு இன்று முதல் இலவச உணவு :அமைச்சர் மாபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்

சென்னையிலுள்ள குடிசைவாசிகளுக்கு இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அமைந்தகரையில் அம்மா சமூக நலக்கூடத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மாபா பாண்டியராஜன், உணவும் அருந்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், வில்லையில்லா உணவை வீடுகளுக்கும் எடுத்துச் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.