விளையாட்டு

இன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2வது டி-20 கிரிக்கெட் போட்டி..

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் இடையேயான 2வது 20ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் கான்பெராவில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது.

இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பிலும், ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்திலும் உள்ளது. எனவே இன்றைய போட்டி மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.