விளையாட்டு

டி20 கிரிக்கெட் போட்டி : இந்திய அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்கு, தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தல்

2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 195 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. சிட்னியில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு அதிரடியாக 194 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 32 பந்துகளில் 58 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 38 பந்துகளில் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் நடராஜன், இப்போட்டியிலும் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அவரது பந்தில் சார்ட் 9 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.