அரசியல்தமிழ்நாடு

கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கினார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்

கொரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு ஆயூஷ் எக்சலண்ட் விருது வழங்கும் விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து ஆயுஷ் எக்சலண்ட் விருதுகளை சித்த மருத்துவர்களுக்கு வழங்கிப் பேசினர்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்திய ஹோமியோபதி சங்க தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.