நாளை திருச்செந்தூரில் வேல்யாத்திரை நிறைவு – எல் முருகன்
திருச்செந்தூரில் நாளை வேல்யாத்திரை நிறைவு பெறும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் வேல்யாத்திரை தொடங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிறைவு விழாவில் மத்தியபிரதேச முதல்வர் பங்கேற்க இருப்பதாக கூறினார்.
இதனை தொடர்ந்து பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம் ஆகிய கோவில்களில் அவர் சாமிதரிசனம் செய்தார். பாஜ.க மூத்த தலைவர் ஹச்.ராஜா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.