இந்தியாவில் இன்று புதிதாக 32,981 பேருக்கு கரோனா; 391 பேர் பலி
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 32,981 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 32,981 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 96,77,203-ஆக அதிகரித்தது.
கரோனாவில் இருந்து ஒரே நாளில் 39,109 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 91,39,901-ஆக அதிகரித்தது. நாடு முழுவதும் 3,96,729 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா தொற்றுக்கு மேலும் 391 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,40,573-ஆக அதிகரித்தது.
‘டிசம்பா் 6-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 14.77 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், நேற்று மட்டும் 8,01,081 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.
கடந்த 10 நாள்களாக, தினசரி புதிதாக தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைவோா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.