விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி

இந்திய அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது.அதிகபட்சமாக மேத்யூ வேட் 80 ரன்களும், மேக்ஸ்வெல் 54 ரன்களும் குவித்தனர். தமிழக வீரர்கள் வாசிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும், நடராஜன் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

பின்னர் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 85 ரன்கள் விளாசினார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில், ஏற்கெனவே 2ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் தொடர் நாயகன் விருது இந்திய அணி வீரர் ஹார்திக் பாண்டியாவுக்கு வழங்கபட்டது.