அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட ,பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் முதலமைச்சருடன் ஆலோசனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

நிவர் புயல் மற்றும் அதையடுத்து பெய்த தொடர் கனமழையால் நேரிட்ட சேதத்தை பார்வையிட டெல்லியிலிருந்து மத்திய குழு கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்தது.

பின்னர் கடந்த 2 நாள்களாக பல்வேறு இடங்களில் அக்குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. இதையடுத்து டெல்லி திரும்பும் முன்பு அக்குழு, தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தியது.

அப்போது முதற்கட்ட வெள்ள நிவாரண நிதியை விரைவில் ஒதுக்க கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.