வணிகம்

இந்திய பங்குச்சந்தை நிலவரம்

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து, சாதனை படைத்துள்ளது.

நேற்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 495 புள்ளிகள் உயர்ந்து 46,103 புள்ளிகள் எனும் புதிய உச்சத்தை தொட்டது. இதேப்போன்று தேசிய பங்குச்சந்தையான நிப்டி 136 புள்ளிகள் உயர்ந்து 13,529 புள்ளிகளை தொட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி நிறுவன பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டது, உள்ளிட்ட காரணங்களால் நேற்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்துள்ளது.