தமிழகத்தில் புதிதாக 1235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில், புதிதாக ஆயிரத்து 235 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் ஆயிரத்து 311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவுக்கு ஒரே நாளில் உயிரிழப்பு 17 ஆக பதிவாக, 28 மாவட்டங்களில் கொரோனாவுக்கு, புதிதாக உயிரிழப்பு இல்லை. தேனியில் 90 வயது மூதாட்டி ஒருவர், கொரோனா வுக்கு பலியாகி உள்ளார்.
சென்னையில் 307 பேருக்கு, புதிதாக,பெருந் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெரம்பலூரில் இரண்டாவது நாளாக கொரோனா இல்லாத நிலையில், 9 மாவட்டங்களில், ஒன்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 10 ஆயிரத்து 299 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.