தமிழ்நாடு

மதுரையில் புதிய கிரானைட் குவாரிகளை தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை உரிமம் வழங்க கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிய உரிமம் வழங்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், ஜெயச்சந்திரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறப்பு அதிகாரி சகாயம் அறிக்கை தாக்கல் செய்த பின், பரிந்துரைகளை ஏற்க கூடாது என கிரானைட் உரிமையாளர்கள் எப்படி கோரமுடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமாகும் வகையில், அளவுக்கு அதிகமாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக சகாயம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதையும், யானை மலை மட்டுமே மிச்சமுள்ளதாகவும், அதிலும் சில பகுதிகள் வெட்டப்பட்டதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.