தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்கான அரசுப் பேருந்து முன்பதிவுகள் இன்று தொடக்கம்

தமிழக மக்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர் செல்வதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வது வழக்கம் .

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நான்காயிரத்து 950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.