இந்தியா

ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2 மாதங்களில் 28 விழுக்காடு உயர்வு

ஏர்டெல் நிறுவனப் பங்கு மதிப்பு கடந்த இரு மாதங்களில் 28 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், மேலும் 42 விழுக்காடு வரை உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏர்டெல் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் 38 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 15 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்துக்கு செப்டம்பர் வரையான இரண்டாவது காலாண்டில் 763 கோடி ரூபாய் நிகர நட்டம் ஏற்பட்டாலும், 25 ஆயிரத்து 785 கோடிரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.