Covid19உலகம்

கொரோனா தடுப்பூசிகளின் பரிசோதனைகள் 90% அளவுக்கு வெற்றி – உலக சுகாதார நிறுவனம்

கொரோனா தொற்று தடுப்பூசிகளின் பரிசோதனைகள் 90 சதவிகிதம் அளவுக்கு வெற்றி பெற்றிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கிலாந்து, ரஷ்யாவில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அமெரிக்காவிலும் அவசரப் பயன்பாட்டுக்காக தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்துத்தெரிவித்த உலகசுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் புரூஸ் அயில்வார்டு, கொரோனா தொற்றுத் தடுப்பூசி கண்டுபிடிப்புக்கான பரிசோதனைகள் பெரும் அளவுக்கு வெற்றி பெற்றிருப்பதாக கூறினார். ஆனால், உடனடியாக எத்தனை டோஸ் தடுப்பூசி கிடைக்கும் என்பதில் பற்றாக்குறை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இப்போது மிக சிலரே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருவதாக கூறிய அவர், தொற்று தடுப்பூசிகளை அதிக எண்ணிக்கையில் தயாரிப்பதுதான் பெரும் சாவல் என்றும் தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பூசி அதிக டோஸ்கள் தயாரிக்கப்பட்டால்தான் தொற்றை தடுக்க முடியும் என்று புரூஸ் அயில்வார்டு கூறினார்.