அரசியல்தமிழ்நாடு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆ.ராசா, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றியும், அவதூறாக பேசியதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் செல்வ குமார் என்பவர் ஆ.ராசா மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படியில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், தவறான பரப்புரை மூலமாக பொதுமக்களை திசைதிருப்புவது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.