தமிழ்நாடு

நாளை முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி

சென்னை மெரினா கடற்கரையில் நாளை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதை ஒட்டி, அங்குள்ள குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சுமார் 9 மாதங்களுக்கு பிறகு மெரினா கடற்கரையில் நாளை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதற்காக நடைபாதை மற்றும் இணைப்புச் சாலையிலுள்ள குப்பைகளை அகற்றுவது, கடற்கரையொட்டிய பூங்காவில் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, கடற்கரையை சுத்தம் செய்து, மணல் பரப்பை சமப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

மெரினாவுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், அவற்றை காவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பார்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.