அரசியல்இந்தியா

இந்தியாவின் வலிமையை சீனா சோதித்து பார்க்கிறது! – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

லடாக் எல்லைப் பிரச்னை விவகாரத்தில் இந்தியாவின் வலிமையை சீனா சோதித்துப் பார்ப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், லடாக் எல்லையில் கடந்த ஏழு மாதங்களாக இந்திய படைகளுக்கு எதிராக சீன படைகள் நிறுத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு அண்டை நாட்டால் ஏற்பட்டிருக்கும் சவாலை இந்தியா எதிர்கொள்ளும் என்று கூறிய அவர், லடாக் எல்லையில் சீனா தனது படைகளை நிறுத்தி இருப்பது அந்த நாட்டின் நலன்களுக்கு ஏற்றது அல்ல என குறிப்பிட்டார்.

இதனால், இந்திய மக்களின் அதிருப்திக்கு சீனா உள்ளாக நேரிடும் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு விவகாரத்தில், அண்டை நாடு ஒப்பந்தத்தை மதிக்காததே பிரச்னைக்குக் காரணம் என்றும் சீனாவை அவர் மறைமுகமாக குற்றம் சாட்டினார்.