அரசியல்தமிழ்நாடு

ஓட்டுக் கேட்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வருபவர்களை மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – அமைச்சர் ஜெயகுமார்!

ஓட்டுக் கேட்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வருபவர்களை மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் செய்யும் சிறப்பு முகாமை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓட்டுக் கேட்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வருபவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என விமர்சித்தார். கொரோனா காலம், புயல், மழை என எந்த நேரமும் அதிமுகவினர் மக்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றும் அதில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.