தமிழ்நாடு

தருமபுரி நெடுஞ்சாலை விபத்து : உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் நேரில் ஆய்வு

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கனவாயில் விபத்து ஏற்பட்ட வளைவான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார் .

இன்று விபத்து நடந்த பகுதியை அமைச்சர் அன்பழகன், ஆட்சியர் கார்த்திகா மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், விபத்தை ஏற்படுத்திய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் புட்புதினை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.