நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியோரை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது – பிரதமர் மோடி
இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001ம் ஆண்டு கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியோரை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர்கள் 8 பேர் உள்பட 9 பேர் பலியான நிலையில், தீவிரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதல் சம்பவத்தின் 19ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டுவிட்டரில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காக உயிர் இழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை நினைவுகூர்வதாகவும், அவர்களுக்கு இந்தியா எப்போதும் நன்றி கடன்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.