அரசியல்தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கடந்த மாதம் 20ம் தேதி அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதே போல் இன்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் – இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.