இந்தியா

உலகம் முழுவதும் முடங்கிய கூகுள் சேவைகள் சிறிது நேரத்தில் சீரானது!

உலகம் முழுவதும் முடங்கியிருந்த கூகுள் சேவைகள் சிறிது நேரத்தில் சீரானது.

கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே வேலை செய்வதால் இணையத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதிலும் கூகுள் தொடர்பான செயலிகளே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் Gmail, யூடியூப், கூகுள் மேப், கூகுள் பே, கூகுள் Document உள்ளிட்ட செயலிகள் சில மணி நேரங்களாக முடங்கின. இதனால் பயனர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

இதனால் பல நிறுவன ஊழியர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதுதொடர்பான ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக YoutubeDown என்ற ஹேஷ்டேக்கை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக யூடியூப் நிறுவனம் விளக்கமளித்தது. யூடியூப்பை பயன்படுத்துவதில் சிரமம் இருப்பது தங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் முடங்கிய கூகுள் சேவைகள் தற்போது சீராகியுள்ளது.