தமிழ்நாடு

அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது – சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட இருப்பதாக சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இறுதி செமஸ்டர் தவிர, பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து, அரசால் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம்.

வரும் 21 ஆம் தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரை நடைபெறும் ஆன்லைன் செமஸ்டர் தேர்வை எழுத விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் பட்டியலை ஒப்படைக்க உறுப்புக் கல்லூரிகளுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக அரியர் வைத்து, Clear செய்ய முடியாமல் தவிக்கும் மாணவர்களும் ஆன்லைன் செமஸ்டர் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.