தமிழ்நாடு

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 79 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 79 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்தனர். அவர்களில் ஒரு சிலருக்கு நேற்று முன்தினம் கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 66 மாணவர்களும், 5 ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. நேற்று 33 பேருக்கு தொற்று உறுதியானது.

இந்நிலையில் விடுதியில் தங்கி இருந்த 539 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதையடுத்து ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், காவலாளிகள், விடுதி பணியாளர்கள் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.