இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த இஸ்ரோ விண்வெளி ஆய்வு பணிகள், மீண்டும் தொடங்கியுள்ளன. அதன்படி கடந்த மாதம் ஏழாம் தேதி பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதில் இடம்பெற்றிருந்த இ.ஓ.எஸ்.-1 செயற்க்கைக்கோளானது விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக தகவல் தொடர்புக்கு உதவும் சிஎம்எஸ் – 1 செயற்கைக் கோளுடன் கூடிய பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆராய்ச்சி மையத்திலிருந்து 25 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து 3.41 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட உள்ளது.

விண்ணிற்கு அனுப்பப்பட உள்ள சிஎம்எஸ் 01 செயற்கைக் கோளானது, தகவல் தொடர்பு வசதிக்கான சி- பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் நிலப்பரப்புகள், அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளில் தகவல் தொடர்பை மேம்படுத்த முடியும்.