தமிழகத்தில் புதிதாக 1,127 பேருக்கு கரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,127 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 10. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 338 பேருக்கும், கோவையில் 116 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,05,777 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,202 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 14 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 7,84,117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மொத்தம் 11,968 பேர் பலியாகியுள்ளனர். 9,692 பேர் இன்னும் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 76,348 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.