அரசியல்தமிழ்நாடு

அதிமுக – பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தேசிய தலைமைதான் முடிவு செய்யும் – எல்.முருகன்

அதிமுக – பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தங்களது தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் .

அரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சியில் “விவசாயிகளின் நண்பன் மோடி” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற எல்.முருகன், நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.