மார்ச் 1-ம் தேதி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும் – அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்தியலிங்கம்
மார்ச் 1-ம் தேதி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும் என்று அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்
அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி காஜாமலை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், மண்டல பொறுப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் MP,மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய ஆர்.வைத்திலிங்கம், ‘அதிமுக தொடங்கிய 48 ஆண்டுகளில் கடந்த 1975, 1977, 1984 , 1989, 1996 ஆண்டுகள், ஜெ. மறைவுக்கு பிறகு என பல பிளவுகளைச் சந்தித்துள்ளது. ஆனாலும் அதிகமான காலம் ஆட்சி புரிந்தது அதிமுகதான். எம்.ஜி.ஆர் மக்களை நேசித்தார். மக்கள் எம்.ஜி.ஆரை நேசித்தனர். ஜெயலலிதாவின் 1991- 1996 ஆட்சி காலத்தில் பல சாதனைகளைச் செய்தார். ஒரே தவறு செய்தார். அந்த தவறு வளர்ப்பு மகன் திருமணத்தால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஜெயலலிதாவைப் பற்றி பேச திமுகவில் யாருக்கும் யோக்கிதை, அருகதை இல்லை. 2 ஜி வழக்கை முடித்து விட்டு ஆ.ராஜா ஊழல் பற்றி பேசட்டும். இறந்தவரைப் பற்றிப் பேசக் கூடாது என்கிற அரசியல் நாகரிகம் கூட இல்லாமல் மு.க.ஸ்டாலின், ஆ.ராஜா பேசுகிறார்கள். மார்ச் 1ம் தேதி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விடும். குறைந்த காலமே உள்ளதால் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ‘சில நடிகர்கள் பேசிட்டு இருக்காங்க. ஜெயலலிதா இல்லை என்று ஒருத்தரு கட்சி ஆரம்பிக்கிறாராம்(ரஜினி) ). இவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தருவோம் என்கிறார்கள். இவர்கள் யாரும் கருணாநிதி ஆட்சியைத் தருவோம் என்று சொல்வதில்லை. இந்த கட்சியில்தான் விவசாயி முதலமைச்சாராக முடியும். டீக்கடை வைத்திருந்தவர் துணைமுதலமைச்சராகவும் சாதாரண தொண்டன் அமைச்சராகவும் முடியும்’ என்று தெரிவித்தார்….