உலகம்

தொலைக்காட்சி நேரலையில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தொலைக்காட்சி நேரலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

78 வயதான அவருக்கு செவிலியர் ஒருவர் தடுப்பூசி போட்டது தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பானது என்று உலக மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த தாம் இதனை ஏற்றதாக பைடன் அறிவித்தார்.

அடுத்த வாரம் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் ஒரு கோடியே 85 லட்சம் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரமாக உயர்ந்துள்ளது.