வணிகம்

இந்திய பங்குச்சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் நிறைவடையும்போது, சென்செக்ஸ் 529.36 (1.14%) புள்ளிகள் உயர்ந்து, 46,973.54 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 148.15 புள்ளிகள் உயர்ந்து 13749.25 ஆக நிலை கொண்டிருந்தது.

ஆக்ஸிங் பேங்க், சன் ஃபார்மா, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.94-க்கும் மேலாக உயர்ந்திருந்தன.

அதேவேளையில் இன்ஃபோசிஸ், நெஸ்ட்லே இந்தியா, இண்டஸ்இண்ட் பேங்க், டெக் மகேந்திரா மற்றும் டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் 1.32% அளவில் வீழ்ச்சி கண்டிருந்தன.

சர்வதேச பங்குச்சந்தைகளில் நிலவும் சாதகமான போக்குகள், இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக, சர்வதேச அளவில் பொருளாதார நிலை சற்றே மீண்டெழத் தொடங்கியுள்ளதால், முதலீட்டாளர்களிடம் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் கூடியிருந்ததால் பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது என பங்கு வர்த்தகர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, ஃபார்மா மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்.