அரசியல்இந்தியா

தமிழக விவசாயிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடல்…

மத்திய அரசு புதியதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் குறித்து தமிழக விவசாயிகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சியின் போது, பிரதமர் உரையாற்றியபோது மத்திய அமைச்சர்களும், கட்சியின் முக்கிய தலைவர்களும் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு பிரதமர் மோடி காணொலி மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அங்கு மோடி உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதேபோல் தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மோடியின் உரை விவசாயிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.