அரசியல்தமிழ்நாடு

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு 3 நாட்களில் பதில் கிடைக்கும் – எல்.முருகன்!

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் பதில் கிடைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார் .

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று கே.பி முனுசாமி பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கும் விரைவில் பதில் கிடைக்கும் என கூறினார்.

பட்டியலின மாணவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப் போவதாக திமுக மக்களிடம் தவறான பிரச்சாரத்தை முன்வைக்கிறது என குற்றம்சாட்டிய முருகன், திமுகவிடம் தாங்கள் கேட்கும் கேள்வி மூலப்பத்திரம் எங்கே என்பதுதான் என்றார்.