அரசியல்

”இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். – தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டதையடுத்து தாம் அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாணிக்கத்திற்கும் கூழாங்கல்லுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் தாம் சாதிக்க ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

காமராஜர் ஆட்சியை தரும் கனவு கண்டதுதான் தமது குற்றம் என்று கூறியுள்ள அவர், இறப்பு என்னைத் தழுவும் வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.