வணிகம்

(31-12-2020) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (31-12-2020) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4724 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4712 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 12 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,696-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 96 உயர்ந்து ரூ. 37,792-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 72.20 விற்பனை ஆன நிலையில் இன்றும் ரூ.0.10 விலை உயர்ந்து ரூ. 72.30 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து இரண்டு நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்த நிலையில், வாரத்தின் நான்காவது நாளான இன்றும் சற்று விலை உயர்ந்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 96 விலை உயர்ந்துள்ளது.கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தும் விலை ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. இந்நிலையில் இன்று சவரன் ரூ.37,792-க்கு விற்பனையாகிறது.