Covid19

அதிவேக தொற்றுத் திறன் உடையதாக கருதப்படும் மரபணு மாற்ற வைரஸ் 30க்கும் அதிகமான நாடுகளில் பரவிவிட்டதாக தகவல்!

அதிவேகதொற்றுத் திறன் உடையதாக கருதப்படும் பிரிட்டன் மரபணு மாற்ற கொரோனா வைரஸ், உலகில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா, துருக்கி, அயர்லாந்து மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த வைரஸ் பரவல் உறுதியாகியுள்ள நிலையில், வியட்நாமும் அந்த பட்டியலில் கடைசியாக சேர்ந்துள்ளது.

பிரிட்டனில் இருந்து வந்த பெண்மணி ஒருவருக்கு இந்த தொற்று உறுதியானதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.

அதே போன்று அமெரிக்காவில், குறைந்தது மூன்று மாநிலங்களில் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.