தமிழ்நாடு

தமிழக அரசின் பொங்கல் பரிசு இன்று முதல் வினியோகம்

தமிழகம் முழுதும், ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு இன்று (ஜன – 04) முதல் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா, 2,500 ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை, சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி கடந்த மாதம், 21ல் துவக்கி வைத்தார். அவை, ரேஷன் கடைகள் வாயிலாக, ஜனவரி, 4ம் தேதி முதல் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

கார்டுதாரர்கள், எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற டோக்கனை, அவர்களின் வீடுகளில், டிச., 26 முதல், 30ம் தேதி வரை, ரேஷன் ஊழியர்கள் வழங்கினர்.அதன் அடிப்படையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம், அனைத்து ரேஷன் கடைகளிலும், இன்று துவங்குகிறது. வரும், 13ம் தேதி வரை, ஒவ்வொரு ரேஷன் கடையிலும், காலையில், 100; மதியம், 100 என, மொத்தம், 200 கார்டுதாரர்களுக்கு வழங்கப்படஉள்ளது.இதற்காக, பொங்கல் பரிசில் இடம் பெற்றுள்ள பொருட்கள் அனுப்பப்பட்டு, கடைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.