Covid19தமிழ்நாடு

உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா

உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையில் உள்ள அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் காமராஜின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தமிழக அமைச்சர்கள் தங்கமணி, கே.பி. அன்பழகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நிலோபர் கபில், சேவூர் ராமச்சந்திரன், செல்லூர் ராஜு, துரைக்கண்ணு உள்ளிட்ட அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .